காலி பணியிடங்களை அதிகரிக்கக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்கச் சென்ற பட்டதாரி ஆசிரியர்களைக் கைது செய்த போலீசார், அவர்களை தேனாம்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.
BT/BRTE தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்கக் கோரி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு அளிக்கச் சென்றனர்.
அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் 70 பட்டதாரி ஆசிரியர்களை கைது செய்தனர். பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.
தங்கள் கோரிக்கையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.