மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் 152வது ஆண்டு நிறைவு விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு தற்போது வரை பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 152 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக ரயில்வே நிர்வாகம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்குச் செல்லும் மலை ரயில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சியளித்தது. மேலும், மலை ரயில் பாரம்பரியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.