திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கப்பட்ட நாணயக் கண்காட்சியில் உலக நாடுகளில் தற்போது பயன்படுத்தப்படும் நாணயங்கள், இந்தியாவின் பழம் பெரும் நாணயங்கள் காட்சிபடுத்தப்பட்டன.
இந்த கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நாணய ஆர்வலர்கள் தங்களிடம் இருக்கும் பழங்கால நாணயங்களை காட்சிபடுத்தினர்.
மேலும் , கலைப்பொருட்கள், பழங்கால பத்திரங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.