கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேக்கரி கடை வாசலை இரவோடு இரவாகக் கட்டட உரிமையாளர் சுவர் எழுப்பி அடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தக்கலை பேருந்து நிலையம் அருகே டென்னிஸ் என்பவர் வாடகைக்குக் கடை எடுத்து பேக்கரி நடத்தி வருகிறார்.
இந்த கட்டடத்தின் உரிமையாளர் அதனை ஜெயசந்திரசேகர் என்பவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயசந்திரசேகர் டென்னிசிடம் கடையை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் டென்னிஸ் கடையை காலி செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, நீதிமன்றம் ஜெயசந்திரசேகரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், பேக்கரி கடை வாசலை மறித்து கட்டட உரிமையாளர் சுவர் எழுப்பியுள்ளார்.