சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிய உச்சமாக சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்தை கடந்தது. இந்த சூழலில் இன்று மீண்டும் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து 3வது நாளாக எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம்ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.