சேலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
சத்யா நகர் அருகே நடைபெற்ற மரம் நடு விழாவில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில் பேருந்து வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.