திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சரிடம், மனு அளிக்கச் சென்ற நபரை அந்த தொகுதி எம்.எல்.ஏ தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவரிடம் மனு அளிக்கச் சென்ற நபரை அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தடுத்து நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து மனுவைக் கொடுக்க வேண்டாம் எனக்கூறி எம்.எல்.ஏ அவரை அலட்சியப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அவ்விருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.