மே 1-ம் தேதி முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இனி செயற்கைக்கோள் மூலமாக ஜிபிஎஸ் முறையில் வாகனங்கள் செல்லும் தொலைவைப் பொருத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த தகவல் உண்மையல்ல என்றும், அது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.