இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளுக்கு விதித்த இறக்குமதி வரிகளுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் தனது உறவை நீடிக்க விரும்பிய அவர் அதிபர் டிரம்பை நேரில் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து அவரை பாராட்டியுள்ள டிரம்ப், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியிடம் சிறந்த திறமை இருப்பதாகத் தெரிவித்தார்.