டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது.
முஸ்தபாபாத் பகுதியில் இருந்த பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று அதிகாலை நேரத்தில் இடிந்து தரை மட்டமானது. இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
பின்னர் போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளை அப்புறப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த கட்டிட விபத்தில் 4 பேர் பலியான நிலையில் , இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் 4 மாடி கட்டடம் இடிந்த விழுந்த போது புகைமண்டலமாக காட்சியளித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.