பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருவண்ணாமலை நகர வீதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்வையொட்டி திருவண்ணாமலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அப்போது தெற்கு மாவட்ட பாஜகவினர் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பாஜக கொடியை ஏந்திச்சென்ற தொண்டர்கள், நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் நின்றபடி அவர்களுக்கு நயினார் வணக்கம் தெரிவித்தார்.
இதேபோல விழுப்புரம் செஞ்சி நான்கு முனை கூட்டு சாலையிலும் நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், சாலையில் பூக்களை தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.