பெண்களை இழிவாக பேசிய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்டு, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையிலான பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் பொன்முடியின் பேச்சு இந்துக்களின் மனதை வெகுவாக புண்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அவர் பேசுவதையெல்லாம் பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்பது ஏற்கத்தக்கதல்ல எனக் கூறிய முருகானந்தம், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.