குடும்பத்தின் நலனுக்காக தமிழக விண்வெளி தொழில் கொள்கையை கொண்டு வந்துள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024ல் வானம் ஸ்பேஸ் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கப்பட்டதாகவும், அந்த “நிறுவனத்தின் 20% பங்குகளை வைத்துள்ளார் சபரீசன் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுகவினர் குடும்பத்திற்காக விண்வெளி தொழில் கொள்கை கொண்டு வரப்பட்டதாகவும், விஞ்ஞான ரீதியான ஊழல் செய்வதில் திமுகவினர் கைதேர்ந்தவவர்கள் என்றும் அவர் கூறினார்.
டாஸ்மாக், கனிமவளம் என அனைத்திலும் கொள்ளை அடிப்பதுதான் திராவிட மாடல் என்றும் நாராயணன் திருப்பதி விமர்சித்தார்.