சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் தெப்ப உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளிய அம்மனை திரளான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.