நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் சூர்யா கதாநாயகனாகவும், நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ, இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடத்தப்பட்டது.
இவ்விழாவில் நடிகர்கள் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். முன்னதாக விழா மேடையில் பேசிய நடிகர் சூர்யா ரசிகர்களால் தான் வாழ்க்கையில் உயர்ந்துள்ளதாகவும், வாய்ப்புகள் கிடைக்கும் தருணத்தில் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.