காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி, புஷ்பவல்லி தாயாருடன் எழுந்தருளி காட்சியளிக்கும் நிலையில், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக ஒவ்வொரு நாட்களும் உற்சவர் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்த நிலையில், இன்று 7ம் நாள் உற்சவமாக திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுவாமிக்கு பட்டாடை, தங்க வைர ஆபரணங்கள், அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.