கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்து இருக்கும் பண்ணை வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனுவக்கரை, அக்கரை, செங்கபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் அமைந்துள்ள பண்ணை வீடுகளை மர்ம கும்பல் நோட்டமிட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை வலியுறுத்தியுள்ளது.