தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது.
நீர் படிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு உள்ளிட்ட் பகுதிகளில் தொடர் மழை பெய்யும் காரணத்தால் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.