தங்க நகை பயன்பாட்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.
சமீபத்தில் வெளியான தரவுகளின் படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க நகை நுகர்வு 563 புள்ளி 4 டன்னாக அதிகரித்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் தங்க நகை நுகர்வை காட்டிலும் அதிகம் என்பதால் அந்நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் மொத்த தங்க நுகர்வு 2023-ஐ காட்டிலும் 2024 ஆம் ஆண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.