தமிழக மக்கள் உடனான தொடர்பை முதல்வர் ஸ்டாலின் இழந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லிக்கு தமிழகம் என்றுமே out of control என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மக்கள் உடனான தொடர்பை முதலவர் ஸ்டாலின் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக அரசு மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.