சென்னையில் வரும் ஜூன் மாதத்தில் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் வரும் ஜூன் மாதம் முதல் 100 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தற்போது மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் 5 பணிமனைகளிலும் முழு வீச்சல் நடைபெற்று வருகின்றன.