சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை இளைஞர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அரும்பாக்கத்தை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன், கடந்த 16ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். மங்கள் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன், மழைநீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்துள்ளான்.
அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்து அந்த சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த இளைஞர் தனது உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.