காங்கோ நாட்டில் படகு தீப்பிடித்து எரிந்தபோது ஆற்றில் குதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றை கடக்க 500க்கும் மேற்பட்டோர் படகில் பயணித்துள்ளனர். அப்போது அந்த படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளான நிலையில், ஏராளமானோர் ஆற்றில் குதித்தனர்.
இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.