திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றப்பின் பழனியில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலுக்கு முதல் முறையாக வருகை தந்தார். அப்போது அவருக்கு பாஜக மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
நயினார் நாகேந்திரனுடன் வருகை தந்திருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து திருவாவினன்குடி முருகன் கோயிலுக்கு சென்ற இருவரும், சுவாமி தரிசனம் செய்தனர்.