இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நீதி மற்றும் சமத்துவத்திற்கான 4ஆம் ஆண்டு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டு பயணம்“ என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் உரையாற்றினார்.
அப்போது, தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டம் 75 சதவீதம் நகல்தான் எனவும், அரசியலமைப்பு சட்சத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் சாசனம் ஏற்கப்பட்டதன் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்குரியதா என சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என தெரிவித்த அவர், ஒரு நாட்டில் சட்டத்துறை தோல்வியடைந்து விட்டால் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.