தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, ஈஸ்டர் பண்டியையொட்டி 30 மணி நேரம் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் தாமாக முன்வந்து அறிவித்தார்.
இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், குர்ச்க், பெல்கொரெட் போன்ற மாகாணங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் உக்ரைக் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.