ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி கிராமத்தில் உள்ள மயில் வாகன சுவாமி முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், அதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு தீரத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், டிரஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.