மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இருப்பினும், வார விடுமுறை மற்றும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரத்து 200 ரூபாய், சங்கரா 600 ரூபாய், பாறை 500 ரூபாய் என மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும், அசைவ பிரியர்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
சென்னை காசிமேடு மீன் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரத்து 100 ரூபாய்க்கும், சங்கரா, ஷீலா, பாறை, கொடுவா உள்ளிட்ட மீன்கள் கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவற்றை அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.