பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
பாட்னா, டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நயா போஜ்பூர் அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் திடீரென தீப்பற்றியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.