நிலச்சரிவு காரணமாக ஜம்மு – காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராம்பன் முழுவதும் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசியதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்தப் பேரிடரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காகச் சென்ற மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.