டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து அங்குச் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படை , தீயணைப்பு வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்பு பணியில் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.