தந்தையும், தாத்தாவும் வாழ்ந்த வீட்டைப் பூட்டிவிட்டு, உங்கள் வாழ்க்கையை ஒரு மூன்று கைப் பைகளில் அடைத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேற வேண்டியிருந்தால் எப்படி இருக்கும் ? மேற்கு வங்கத்தின் , முர்ஷிதாபாத்தில் இஸ்லாமியர்களின் வன்முறை தாக்குதல்களால், இந்துக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, அகதிகளாகச் செல்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் நிலங்கள் வக்ஃப் வாரியத்திடம் உள்ளன. மத்திய இராணுவத் துறை, ரயில்வே துறைக்கு அடுத்து இந்தியாவில் அதிக நிலங்களை வக்ஃப் வாரியமே வைத்துள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஒரு சில இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு காட்டிய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வெளிப்படையாகப் புதிய வக்ஃப் சட்டத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இஸ்லாமியர்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்தே, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் மேற்கு வங்கத்தில் வன்முறை கலவரமாக மாறியது.
70 சதவீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) தலைமையில், அமைதியான போராட்டம் என்ற போர்வையில், இந்துக்களுக்கு எதிராகப் பெரிய அளவிலான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.
ஜும்மா தொழுகை முடிந்த பிறகு, முர்ஷிதாபாத்தில் உள்ள சுதி மற்றும் சம்சர்கஞ்ச் பகுதிகளில் தொடங்கிய இஸ்லாமியர்களின் வன்முறை தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கர் வரை பரவியது.
இந்து குடும்பங்களின் வீடுகளும், கடைகளும் குறிவைக்கப்பட்டு சூறையாடப்பட்டன. மேலும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. கோயில்களில் இருந்த தெய்வத் திருமேனிகள் உடைக்கப்பட்டன.
வன்முறையில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு தீ வைத்ததாகவும், முன்னதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரைக் கொடூரமாகத் தாக்கியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். முன் வாசல் வழியாக நுழைய முடியாத நிலையில், பின் வாசல் வழியாக நுழைந்த இஸ்லாமியர்கள், வீட்டிலிருந்த இந்துக்களைத் தாக்கி, வீட்டை அடித்து நொறுக்கி, டிவி முதல் விலையுயர்ந்த வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள், முர்ஷிதாபாத்தில் உள்ள இந்து குடும்பங்களுக்குச் சொந்தமான வீடுகளையே குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். அதற்காக, குண்டுவெடிப்பு மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கள் நடத்தப் பட்ட இந்துக்களின் வீடுகளில், முன்கூட்டியே இஸ்லாமியத் தீவிரவாதிகள் கருப்பு மை வைத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எந்த வீட்டுக்குக் குண்டு வீச வேண்டும், எந்த வீட்டுக்குத் தீ வைக்க வேண்டும் என்பதை இஸ்லாமிய தீவிரவாதிகள் அறிந்து கொள்ளும் வகையில் இந்து வீடுகளில் கருப்பு மை வைத்து அடையாளம் குறித்துள்ளனர்.
கருப்பு மை வைக்கப் பட்ட இந்து வீடுகள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன.மேலும், குண்டுகள் வீசப்பட்டு, அந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதிகளின் இந்த வன்முறையில், 40 வயதான சந்தன் தாஸ் மற்றும் அவரது தந்தை 70 வயதான ஹர்கோபிந்த் தாஸ் உட்பட 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
மேலும் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், உயிர் பிழைத்தால் போதும் என்று, தங்கள் வீடுகளை விட்டுவிட்டு, அருகிலுள்ள மால்டாமாவட்டத்துக்குப் படகுகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் தப்பிச் செல்கின்றனர்.
இந்துக்கள் என்ற ஒரே காரணத்துக்காக, ஒரு மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில்,சொந்த ஊரை விட்டு,அகதிகளாகச் செல்வது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. (Jaffrabad) ஜாஃப்ராபாத் கிராமத்துக்கு மிக அருகில் உள்ள படுகொலை நடந்த டிக்ரி பகுதியில் வாழும் எழுபது வயதான ( Krishna Chandra Pal ) கிருஷ்ண சந்திர பால் என்பவர், தனது மனைவி லில்லி பால் மற்றும் உறவினர் பிரதிமா பால் ஆகியோருடன் ஊரைவிட்டு வெளியேறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், டீசல் வெடி குண்டுகளை வீசி, தனது வீட்டை தாக்கியதாக கூறியுள்ள Krishna Chandra Pal, தங்களை உயிரோடுஎரித்துக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
வீட்டின் பின்வாசலில் வழியாகத் தப்பித்தத கிருஷ்ண சந்திர பால், வீட்டுப் பால்கனியின் இரும்பு கிரில் முற்றிலும் பிடுங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிருஷ்ண சந்திர பால் வீடு இஸ்லாமிய வன்முறையின் அடையாளங்களைக் கொண்டுள்ளது, வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன.
புதிய மணப்பெண்ணாக இந்த வீட்டுக்கு வந்தேன். கடைசி வரை இங்கேயே வாழ்வேன் என நினைத்தேன். ஆனால், இப்படி வலுக்கட்டாயமாக வீட்டை இழந்து வெளியேற வேண்டும் என கனவிலும் நினைக்க வில்லை இஸ்லாமியர்கள் இந்துக்களை இங்கே வாழ விடவில்லை. வேறு வழியில்லாமல், மூன்று மகள்களுடன் பின் வாசல் வழியாக தப்பித்ததாக பாலின் மனைவி லில்லி பால் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
100 கிராம் தங்கமும் 3 லட்சம் ரூபாய் பணமும் தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறியுள்ள லில்லி பால், இனி இங்கே இந்துக்கள் வாழ முடியாது என்றும், எந்த திசையில் இருந்து, எப்போது, இஸ்லாமிய தீவிரவாதிகள் வருவார்களோ என பயப்படுவதாக கூறிய லில்லி, எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமில் மட்டுமே பாதுகாப்பை உணர்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லைப் பாதுகாப்புப் படை இல்லையெனில், முர்ஷிதாபாத்தில் இந்துக்கள் உயிர்வாழ முடியாது என்றுஅழுத்தமாகக் கூறியுள்ளார். மால்டா மாவட்டத்தில், திறக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில்,தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர் மற்றும் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இருவரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களின் துயரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
ஏற்கெனவே, முர்ஷிதாபாத்தில் மட்டுமல்ல, இதேபோன்ற வன்முறை பதிவாகும் வேறு எந்த மாவட்டத்திலும் மத்தியப் படைகளைநிறுத்தக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, இந்துக்கள் பாதுகாப்புக்காக கூடுதல் எல்லை பாதுகாப்புப் படைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் முர்ஷிதாபாத்தில் ஈடுபடுத்தியுள்ளது.