பிரதமர் உருவப்படம் எரிப்பு - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 28, 2026, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் உருவப்படம் எரிப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வக்பு சட்டத்தை எதிர்ப்பதாக கூறி பிரதமரின் உருவப்படம் எரிக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி திமுக-வின் ஆதரவு அமைப்பான ஆதித்தமிழர் கட்சியினர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப்படத்தை எரித்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இஸ்லாமிய சகோதரிகளின் உரிமைகளையும் இஸ்லாமிய மக்களின் நலனையும் ஒருசேரப் பாதுகாக்கும் இச்சட்டத்தை முழு மனதோடு ஆதரிப்பதாக நாட்டின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய சமூகங்களைச் சார்ந்த மக்களும், இச்சட்டத்தின் திருத்தங்களைப் படித்து தெளிவுபெற்ற அறிஞர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வேளையில், திமுக அரசின் நிழலில் இருக்கும் ஒரு சில அமைப்புகளுக்கு இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் தைரியம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், திமுக அரசே ஆதித்தமிழர் கட்சியினரைத் தூண்டிவிட்டு, இன்று இந்த போராட்டம் அரங்கேற்றப்பட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது.

காரணம், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும், பாராளுமன்றத்திலும் பல மணி நேரம் விவாதம் நடைபெற்ற பிறகே வக்ஃப் திருத்த மசோதாவானது சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்த திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற திடீர் போராட்டங்களும் அதில் நமது பிரதமரின் உருவப்படங்கள் எரிக்கும் வன்முறைகளும் எதற்கு? இதுபோன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் ஒரு பதற்ற சூழலை உண்டாக்குவதோடு சட்டம் ஒழுங்கினை சீர்குலைக்கும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? எனவே, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் தடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதோடு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன்பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்Burning of Prime Minister's portrait - Nainar Nagendran condemns!
Share
Tweet
SendShare
Previous Post

உள்வாடகை மோசடி – டிஜிபி எச்சரிக்கை!

Next Post

முர்ஷிதாபாத் வக்ஃப் வன்முறை : வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறும் இந்துக்கள்!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies