நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் வாங்கிய கடன் தொகையை திருப்பி தரக்கோரி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. அன்னை இல்லம் வீடு தனக்கு சொந்தமானது என்றும், வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் பிரபுதான் என தெரிவித்தார். மேலும், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்வதாகவும் ஆணையிட்டார்.
இது குறித்து வில்லங்கப் பதிவில் திருத்தம் செய்யும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.