மஹாராணா பிரதாப், சிவாஜி மஹாராஜ் ஆகிய இருவரும் முஸ்லிம்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியவர்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த விழாவில், மேவார் ஆட்சியாளர் மஹாராணா பிரதாப்பின் திருவுருவ சிலையை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், பாபர், தைமூர், அவுரங்கசீப், கோரி, கஸ்னவி ஆகியோரைப் புகழ்ந்து பேசுவதால் எந்த முஸ்லிம் ஓட்டும் கிடைக்காது என்றும், இவர்களைப் புகழ்பவர்கள் நம் நாட்டு முஸ்லிம்களை அவமதிப்பதாகவும் தெரிவித்தார்.