சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான புதிய ஆங்கில வழி பாடப் புத்தகத்தில் இந்தி திணிப்பில்லை என NCERT விளக்கமளித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களின் தலைப்புகள் ஹிந்தி மொழியில் இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான NCERT விளக்கமளித்துள்ளது.
அதில், புதிய பாடப் புத்தகங்களுக்கு இந்திய கலாசாரம் மற்றும் அறிவு மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகங்களின் பெயர்கள் இந்திய மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், இந்தி மொழியை மட்டும் சார்ந்தவை அல்ல எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.