உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நான்கு வழிச் சாலை திட்டம் குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தினார்.
கோரக்பூரை தியோரியாவுடன் இணைக்கும் நான்கு வழிச் சாலையின் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி இருந்தார்.
தற்போது நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அதன் திட்டங்கள் குறித்தும் அவர் நேரில் ஆய்வு நடத்தினார்.
பின்னர் சாலையின் வழித்தடங்கள், அதில் அமைய இருக்கும் கட்டுமான அமைப்புகள் குறித்து அதிகாரிகளிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.