தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி நோக்கித் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
ஆண்டிப்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்துகொண்டிருந்த கனரக வேன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் முத்துலிங்கம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.