சிங்கம், புலியை 3 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
வண்டலூரில் உயிரியல் பூங்காவில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தப் பூங்காவில் வளர்ந்து வந்த ‘ஸ்ரேயர்’ என்ற சிங்கத்தையும், ‘யுகா’ என்ற புலியையும் 3 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
இவர் ஏற்கெனவே, கடந்த 2021ஆம் ஆண்டு யானை மற்றும் சிங்கத்தைத் தத்தெடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.