அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டைத் தாங்கள் எதிர்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றபோது வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது மேற்கு வங்கத்தில் மத்திய படையை நியமிக்கும் அவசியம் உள்ளது எனவும், வழக்கு தொடர்பாகக் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் அவசரநிலையை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவிட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசு நிர்வாகத்தில் தாங்கள் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அவசர நிலை தொடர்பான வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.