தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மீக சேவைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்தவர் போப் பிரான்சிஸ் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
உலக கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மீக சேவைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்த போப் ஆண்டவரின் புனித ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சற்று இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.