வங்கதேசத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் பாதை இணைப்பு திட்டங்களை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கு அங்கு அதிகரித்து வரும் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மை ஆகியவையே காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசம் இடையேயான போக்குவரத்தை நோக்கமாகக் கொண்டிருந்தது.
தற்போது நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற அண்டை நாடுகள் வழியாக மாற்றுப் போக்குவரத்துக்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.