கரூரில் முகமூடி கொள்ளை கும்பல், பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் – ஈரோடு சாலையில் அமைந்துள்ள தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதிக்கு காரில் வந்த முகமூடி கொள்ளை கும்பல், அடுத்தடுத்து 2 வீடுகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது.
முகமூடி கொள்ளை கும்பல் காரில் வந்ததும், ஆயுதங்களால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்ததும் அங்கிருந்த சிசிடிவியில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
அதிர்ச்சியளிக்கும் இந்த சிசிடிவி வீடியோவை வைத்து, முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.