டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் துறையில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகப் பேச முயன்றார்.
அப்போது இபிஎஸ்-இன் மைக் ஆஃப் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது டாஸ்மாக் ஊழல் குறித்துப் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். டாஸ்மாக் ஊழல் குறித்துப் பேசினால் பயம் ஏன்? எனக் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.