பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசனின் புகழைப் போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.
பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் வரை தமிழ் வாரவிழா கொண்டாடப்படும் எனவும் அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும் எனவும் கூறினார்.
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு ஆய்வு அரங்கங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் எனக்கூறிய முதலமைச்சர், பாவேந்தர் பிறந்தநாள் தமிழ் மணக்கும் நாளாகக் கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.