திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட லாடவரம் கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல உரியச் சாலை வசதி இல்லாததால், நெல் வயல் வழியாக இறந்தவரின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர்.
லாடவரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள சுடுகாட்டிற்குச் சாலை வசதி செய்து தரக் கோரி பலமுறை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.