வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கொலை வழக்கில் போலி சாட்சியம் அளித்த விவகாரத்தில் விஏஓ, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
குடியாத்தத்தைச் சேர்ந்த ஹயாத் பாஷா என்பவர் மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தனது நண்பரை அடித்து கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 16 பேர் பொய் சாட்சி கூறியதால் ஹயாத் பாஷா விடுவிக்கப்பட்டதாக வேலூர் முதன்மை நீதிமன்ற நீதிபதி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
போலி சாட்சியம் அளித்ததாகக் காவல் ஆய்வாளர் மற்றும் விஏஓ மீது 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.