விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பலத்த சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
சிதம்பராபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
மேலும் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.