தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு ராட்டின தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவின்போது லெனின் தர்மராஜ் என்பவர் 50 லட்சம் ரூபாயில் ஏலம் எடுத்து ராட்டினங்களை அமைத்துள்ளார்.
3 நாட்கள் ராட்டினங்கள் இயங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் தடையின்மை சான்று பெறவில்லை எனக்கூறி ராட்டினங்கள் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏலத் தொகையைத் தராமல் கோயில் நிர்வாகம் அலைக்கழிப்பதாகக் குற்றம்சாட்டி லெனின் தர்மராஜ் மற்றும் ராட்டின தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.