பெங்களூருவில் மொழி பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் தன்னை தாக்கியதாக இந்திய விமானப்படை அதிகாரி வீடியோ வெளியிட்ட நிலையில் அவர், பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்தது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் என்பவர் தன்னை இளைஞர் ஒருவர் தாக்கியதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் கன்னட மொழி பிரச்சனை காரணமாகத் தன்னை இளைஞர் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
முன்னதாக அந்த இளைஞரை விமானப்படை அதிகாரி தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இளைஞரைக் கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டுப் பொய்க் குற்றச்சாட்டை முன் வைத்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.